ஆர்ப்பாட்டத்தில் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவத்தினரை எச்சரித்த காவல்துறை அதிகாரிகள்!

ஆர்ப்பாட்டத்தில் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவத்தினரை எச்சரித்த காவல்துறை அதிகாரிகள்!
Army police conflict

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவத்தினரை தகாத முறையில் எச்சரித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைமா உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.

இலங்கை இராணுவத்தின் உந்துருளி குழுவின் இரண்டு உந்துருளிகள்
நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி இடப்பட்டுள்ள வீதித் தடையை அண்மித்த போது, அதில் வந்த இராணுவத்தினரிடம் தவறாக நடந்து கொண்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு
எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இராணுவத் தளபதி காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்