ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார்
uae president death

 ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார்.

அவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும் அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார்.

1971 ஆம் ஆண்டு முதல் ஷேக் கலீஃபாவின் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அரபு நாட்டின் முதல் அதிபராக இருந்து வந்தார். இவரது மறைவிற்குப் பிறகு ஷேக் கலீஃபா இரண்டாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948 ஆம் ஆண்டில் பிறந்த ஷேக் கலீஃபா, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபராகவும், அபுதாபி அரசாங்கத்தின் ஆட்சியாளராகவும் இருந்தார்.