சிவனொளிபாதமலையில் இடம்பெற்ற கோர விபத்து! இருவர் பலி:பலர் படுகாயம்

சிவனொளிபாதமலையில் இடம்பெற்ற கோர விபத்து! இருவர் பலி:பலர் படுகாயம்

 

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்துவிபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நோட்டன்-தியகல வீதியில் சிவனொளிபாதமலை யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொலிஸார் விசாரணை
சிவனொளிபாதமலையில் இடம்பெற்ற கோர விபத்து! இருவர் பலி:பலர் படுகாயம் |  

இரத்மலானை பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களை ஏற்றிச்சென்றிருந்த நிலையில், மீண்டும் இரத்மலானை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளதாகவும், இவர்களில் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன