Throat Ulcer : தொண்டை புண் குணமாக வீட்டு வைத்தியம்!

Throat Ulcer : தொண்டை புண் குணமாக வீட்டு வைத்தியம்!


ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகள் இருக்கும்போது தொண்டை புண் எளிதாக உண்டாகும். சாதாரண தொண்டை புண் சளி காரணமாக உண்டானால் ஒரு வாரத்தில் குணமமடையும். இதுவே 2-10 வாரங்களுக்கு மேல் நீடித்தால் அது தொண்டை அல்சர் அல்லது தொண்டை புற்றுநோயின் ஆரம்பமாக இருக்கலாம் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் பிற வயிற்று பிரச்சினைகள், பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் பற்றாக்குறை, ஃபோலிக் அமில பற்றாக்குறை, இரும்புச்சத்து குறைபாடு போன்ற கனிம குறைபாடுகளாலும் தொண்டையில் புண் ஏற்படலாம்.

​தேன்​:
தொண்டை புண் உண்டாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இந்த தொண்டைப் புண்ணுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். தொண்டை புண் இருக்கும்போது உண்டாகும் எரிச்சலைக் குறைக்க உதவுவதோடு தொண்டை புண்ணை ஆற்றவும் செய்யும். ஒரு ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து அதை சாப்பிட்டு வர தொண்டை புண் வேகமாக சரியாகும்.

​உப்பு நீர்​

வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது சளி தேங்கியுள்ள சுரப்புகளை உடைக்கவும், நுண்ணுயிரிகளை கொல்லவும், தொண்டை புண்ணை போக்கவும் உதவி செய்கிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பை சேர்த்து வாய் கொப்பளிக்கும்போது அது வீக்கத்தைக் குறைப்பதோடு தொண்டையைச் சுத்தமாக வைத்திருக்கவும் செய்கிறது. தொண்டை புண் இருக்கும்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இதை செய்து வருவது நல்லது. குறிப்பாக கல் உப்பை பயன்படுத்துவது நல்லது.

 
கெமோமில் டீ:

கெமோமில் டீ புண்களை ஹீலிங் செய்கிற தன்மை கொண்டது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்றப் பண்பு பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. தினமும் இரண்டு கப் அளவுக்கு இந்த கெமோமில் டீயை குடித்து வருவதன் மூலம் தொண்டையில் ஏற்படும் வலி குறைய ஆரம்பிக்கும். அதேபோல கெமோமில் இலைகளை வெந்நீரில் சேர்த்து நீராவி பிடிப்பதன் மூலம் மூச்சுக் குழாய் வழியே உள்ளிழுக்கப்பட்டு தொண்டை புண், சளி உள்ளிட்ட அறிகுறிகளைக் குறைக்க உதவி செய்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி வைரஸை எதிர்த்துப் போராட உதவி செய்கிறது.

​பேக்கிங் சோடா​:

பேக்கிங் சோடாவை உப்பு தண்ணீருடன் சேர்த்து வாய் கொப்பளிப்பது தொண்டைப் புண்ணை ஆற்றவும் உதவும். ஏனெனில் இது பாக்டீரியாவைக் கொல்வதோடு ஈஸ்ட் மற்றும் பூஞ்சை வளர்வதையும் தடுத்து நிறுத்துகிறது. ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன், 1/4 டீஸ்பூன் சமையல் சோடா மற்றும் 2 சிட்டிகை அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வாய் கொப்பளித்து வாருங்க்ள. தொண்டை புண் வேகமாக ஆற ஆரம்பிக்கும்.


​வெந்தயம்​:
​​
வெந்தயத்தில் ஏராளமான மருத்துவப் பயன்கள் இருக்கின்றன. வெந்தயத்தை டீயாகப் போட்டுக் குடிக்கும்போது தொண்டை புண் விரைவில் குணமாவதோடு தொண்டைக்கு இதமாகவும் இருக்கும். அதிக பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தொண்டை வலியைக் குறைப்பதோடு எரிச்சல் அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளையும் அழிக்கும் பண்புகள் கொண்டது. வெந்தயத்தை பல்வேறு வகைகளில் எடுத்துக் கொள்ளலாம். நேரடியாக வெந்தய விதைகளை சாப்பிடலாம், உணவில் சேர்த்து சமைத்து சாப்பிடலாம், தேநீராகவும் எடுத்துக் கொள்ளலாம்.


​ஆப்பிள் சிடார் வினிகர்​:
 
ஆப்பள் சிடார் வினிகர் பல்வேறு இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது, மேலும் இது நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் தொண்டையில் உள்ள சளியை வெளியேற்ற உதவுவதோடு அதன் அமில தன்மை காரணமாக பாக்டீரியா பரவுவதை தடுக்கிறது. 1 முதல் 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ரு கப் தண்ணீரில் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வாய் கொப்பளிக்கவும்.

​பூண்டு​

பூண்டில் ஆன்டி - மைக்ரோபியல் குணங்கள் உள்ளன. இதிலுள்ள அல்லிசின் என்பது ஒருவகை ஆர்கனோசல்பர் இரசாயனம், இது இயற்கையாகவே தொற்று எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டு சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட வை உண்டாகக் காரணமாக இருக்கும் வைரஸ்களைத் தடுக்க உதவும். அதோடு ஃபிரஷ்ஷான பூண்டை உணவில் சேர்த்து வருவதன் மூலம் அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளின் நன்மைகளைப் பெற முடியும்.


​தவிர்க்க வேண்டிய உணவுகள்​

தொண்டை புண் இருக்கும்போது அமிலத்தன்மை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. அன்னாசி, தக்காளி, மிளகு போன்ற அமிலத் தன்மை கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது