திருகோணமலையிலிருந்து யாழ். நோக்கி சென்ற பஸ் கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி!

கிளிநொச்சி – பளையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
முள்ளியடி பகுதியில் 21 மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த இருபதுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அவர் கூறினார்.
விபத்தில் காயமடைந்த 10 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.