காலையில் ஒரு கப் கொத்தமல்லி நீர் குடிப்பதால் கிடைக்கும் இந்த நன்மைகளைத் தவறவிடாதீர்தீகள்..

காலையில் ஒரு கப் கொத்தமல்லி நீர் குடிப்பதால் கிடைக்கும் இந்த நன்மைகளைத் தவறவிடாதீர்தீகள்..
health benefits of Coriander water

காலையில் ஒரு கப் கொத்தமல்லி நீர் குடிப்பதால் கிடைக்கும் இந்த நன்மைகளைத் தவறவிடாதீர்தீகள்..


கொத்தமல்லி இந்திய உணவு வகைகளில் முதன்மையானது. நம் பல கறிகளின் சுவையை அதிகரிப்பதில் கொத்தமல்லி தூளின் இருப்பு கொஞ்சமல்ல. கொத்தமல்லியில் சுவை மட்டுமின்றி பல நன்மைகளும் உள்ளன. காலையில் ஒரு கப் கொத்தமல்லித் தண்ணீருணீடன் அன்றைய நாளைத் தொடங்குவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். இதைச் செய்ய, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லியை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை மறுநாள் காலையில் குடிக்கலாம். இப்படி கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்


கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நமது உடலில் உள்ள ஃப்ரீ
ரேடிக்கல்களின் அளவைக் குறைத்து, நமது நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிக்கும். இதன் மூலம் பல நோய்களைத் தடுக்கலாம்


முடியை வலுவாக்கும்


கொத்தமல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ நிறைந்துள்ளதால், முடி
மீண்டும் வளரவும், வலிமையாகவும் இருக்கும். கொத்தமல்லியில் உள்ள
சத்துக்கள் முடி உதிர்வைக் குறைத்து உடைவதைத் தடுக்கிறது. எண்ணெய்
சேர்த்து கொத்தமல்லி தலையில் தேய்ப்பது நல்லது.


உடல் எடையை குறைக்க உதவுகிறது


காலையில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால், செரிமான அமைப்பை
மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். எடையைக் குறைக்கவும்
உதவுகிறது.


ஒளிரும் தோல்


கொத்தமல்லியில் இரும்புச் சத்தும் அதிகம். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு
மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தில் பருக்கள் வராமல் தடுத்து,
சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.


கொலஸ்ட்ராலை குறைக்கும்


கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களும் காலையில் ஒரு கப் கொத்தமல்லி
தண்ணீர்ணீகுடிக்கும் பழக்கத்தை பின்பற்றலாம். கொலஸ்ட்ராலைக்
குறைக்கவும் உதவுகிறது.


சர்க்கரை நோய் கட்டுப்பாடு


நீரிழிவு நோய்க்கும் கொத்தமல்லி நீர் ஒரு சிறந்த மருந்தாகும்.