ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 3, 2023 திங்கட்கிழமை

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 3, 2023 திங்கட்கிழமை

அஸ்வினி: அடுத்தவர் உதவி செய்வார் என்று எதிர்பார்க்காதீர்கள்.

பரணி: தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்பதை மறக்காதீர்கள்.

கார்த்திகை: தொலைந்து போன பொருள் உங்களுக்கு வந்து சேரும்.

ரோகிணி: முக்கியமான வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

மிருகசீரிடம்: இன்சூரன்ஸ் பணம் முக்கிய தேவைக்கு உதவும்.

திருவாதிரை: பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.

புனர்பூசம்: பேச்சினால் மற்றவர்களை மயக்கி காரியம் சாதிப்பீர்கள் .

பூசம்: பயண நேரத்தில் வண்டி பழுதாகி சிக்கலை ஏற்படுத்தலாம்.

ஆயில்யம்: நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

மகம்: வியாபாரத்திற்கு இடையூறாக இருந்த வில்லங்கம் விலகும்.

பூரம்: உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களின் பேச்சை கேளுங்கள்.

உத்திரம்: வயது குறைவானவர்களின் நட்பில் எச்சரிக்கையாக இருங்கள்.

அஸ்தம்: அலுவலகத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து போகும்.

சித்திரை: செலவழித்த பணத்திற்கு ஈடாக வருமானம் வரும்.

சுவாதி: வேலையில் திறமை பளிச்சிடுவதால் பாராட்டுக் கிடைக்கும்.

விசாகம்: ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருமானம் பெருகும்.

அனுஷம்: பெருந்தன்மையால் குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்றுவீர்கள்.

கேட்டை: வீடு பிளாட் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

மூலம்: மனதை அமைதிப்படுத்த ஆலய வழிபாடு செய்யுங்கள்.

பூராடம்: வட்டியுடன் திருப்பிச் செலுத்தி கடன் தொகையை அடைப்பீர்கள்.

உத்திராடம்: மற்றவர்கள் குறை சொல்வதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

திருவோணம்: ஆர்வம் காரணமாக புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

அவிட்டம்: கடந்தகால சிக்கல்களை கடின உழைப்பால் அகற்றுவீர்கள்.

சதயம்: தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பூரட்டாதி: அடுத்தவர்களுக்காக கையெழுத்திடுவதை தவிருங்கள்.

உத்திரட்டாதி: திட்டமிட்டு நடந்து செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

ரேவதி: பிள்ளைகள் பற்றிய பயம் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும்