நாம் தூக்கி வீசும் நாவல் பழத்திற்கு வெளிநாட்டில் ஏன் இவ்வளவு வரவேற்பு என்று தெரியுமா!

நாவல் பழங்கள் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விளைகின்றன. நாவல் மரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல நன்மைகள் உள்ளன. நாவல் பழத்தை வைத்து ஊறுகாய், ஜாம், ஜூஸ் மற்றும் வயின்கள் செய்யலாம். இவை அனைத்தும் சிறந்த சுவை கொண்டவை, மேலும் வினிகரை அதன் பழங்களிலிருந்து தயாரிக்கலாம். இவற்றின் மருத்துவ நன்மைகள் எண்ணிலடங்காதவை. இதன் விதைகளை நாம் உபயோகிக்காமல் தூக்கிவீசுகின்றோம் ஆனால் அவற்றை சர்க்கரை நோயின் சிறந்த மருந்தாக வெளிநாடுகளில் பயன்படுத்துகின்றனர்