ஜென்ம நட்சத்திர பலன்கள் - சித்திரை-01-2023 சனிக்கிழமை
அஸ்வினி: நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்:
பரணி: புதிய நண்பர்கள் மூலம் நினைத்துப்பாராத லாபம் கிடைக்கும்.
கார்த்திகை: செய்யாத தப்புக்கு குற்றம் சுமத்தினால் கவலை கொள்ளாதீர்கள்.
ரோகிணி: விவேகமாக இருங்கள் தொல்லைகள் நெருங்காது.
மிருகசீரிடம்: வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவீர்கள்.
திருவாதிரை: வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும்.
புனர்பூசம்: வேலைகளை முனைப்புடன் செய்து பாராட்டு பெறுவீர்கள்.
பூசம்: நிதி வசதிக்காக போராட்டம் நடத்திய நிலை மாறும்.
ஆயில்யம்: ஏமாற்ற நினைத்தவர்களை அடையாளம் காண்பீர்கள்.
மகம்: உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளை விடாதீர்கள்.
பூரம்: ஒதுங்கிப் போனவர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
உத்திரம்: கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்துவீர்கள்.
அஸ்தம்: விலகிப்போன நண்பர்களிடம் நெருக்கத்தை அதிகப்படுத்துவீர்கள்.
சித்திரை: குதூகலமான நிகழ்வுகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள் .
சுவாதி: தொழில்ரீதியான பயணங்களில் வெற்றியடைவீர்கள்.
விசாகம்: பெருந்தன்மையால் குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்றுவீர்கள்.
அனுஷம்: வெளி மனிதர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.
கேட்டை: புதிய சவால் ஒன்றை சந்தித்து நிறைவேற்றுவீர்கள்.
மூலம்: நண்பர்களை எச்சரித்து பிரச்சனையிலிருந்து காப்பாற்றுவீர்கள்.
பூராடம்: வேண்டாத இடத்தில் உரிமை எடுத்து பிரச்சனைக்குள்ளாவீர்கள்.
உத்திராடம்: பணவரவுக்காக நீங்கள் செய்த முயற்சி பலன் அளிக்கும்.
திருவோணம்: கணக்குகளை ஆராய்ந்து செலவைக் கட்டுப்படுத்துவீர்கள்.
அவிட்டம்: பணியிடத்தில் மேலதிகாரிகள் மனம்விட்டு பாராட்டுவார்கள்.
சதயம்: பலநாள் பேச்சுவார்த்தைக்கு என்று நல்ல முடிவு கிடைக்கும்.
பூரட்டாதி: புதிய தொழில் தொடங்குவது பற்றி திட்டம் தீட்டுவீர்கள்.
உத்திரட்டாதி: கொடுத்த தொகை திரும்பக் கிடைத்து மகிழ்வீர்கள்.
ரேவதி: அடுத்தவர்களுக்காக ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள்.