ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 6, 2023 வியாழக்கிழமை
அஸ்வினி: கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பரணி: வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
கார்த்திகை: மேலதிகாரிகளிடம் எது குறித்தும் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
ரோகிணி: பொருளாதாரத் தடைகள் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
மிருகசீரிடம்: பயணத்தில் பொருட்களை பத்திரமாக வைத்திருங்கள்.
திருவாதிரை: வெளியூர் பயணங்களில் பொருளாதார அனுகூலம் கிடைக்கும்.
புனர்பூசம்: கடந்தகால நெருக்கடிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
பூசம்: அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் வர தாமதமாகும்.
ஆயில்யம்: உங்கள் திறமையை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
மகம்: போட்டிகளை எதிர் கொண்டு எளிதாக வெற்றி பெறுவீர்கள்.
பூரம்: தொழிலில் அதிக முதலீடுகள் செய்வதை தள்ளி வைக்கவும்.
உத்திரம்: பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி தரும் இனிய நிகழ்ச்சி நடக்கும்.
அஸ்தம்: வியாபாரத்தில் சிக்கல்கள் தீர்ந்து நல்ல பலனைக் காண்பீர்கள் .
சித்திரை: ஆன்லைன் வர்த்தகத்தில் உங்களுக்கு சிறந்த யோகம் உண்டு.
சுவாதி: என்னவோ ஏதோ என்ற அச்சம் மனதைச் சஞ்சலப்படுத்தும்.
விசாகம்: எதிர்காலம் கருதி அசையாச் சொத்துக்கள் வாங்குவீர்கள்.
அனுஷம்: புதிய வாகனங்கள் கூட எதிர்பாராத செலவு வைக்கும்.
கேட்டை: இடமாற்றம் எதிர்பார்த்தவர்க்கு நல்ல செய்தி கிடைக்கும்.
மூலம்: பணப்புழக்கம் அதிகமாகி தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
பூராடம்: பெரிய மனிதர்களின் தொடர்பால் நீண்டநாள் பகை மறையும்.
உத்திராடம்: அலைச்சலால் உடல் சோர்வு ஏற்பட்டு மன அமைதி கெடும்.
திருவோணம்: பங்குச் சந்தை வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்.
அவிட்டம்: நான் சொல்வதுதான் சரி என்று யாரிடமும் வாதம் செய்யாதீர்கள்.
சதயம்: நெருங்கியவர்களின் உதவியால் வியாபாரம் செழிப்படையும்.
பூரட்டாதி: புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும்.
உத்திரட்டாதி: வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையும்.
ரேவதி: எதையும் சிறப்பாகக் கையாண்டு நல்ல பெயர் எடுப்பீர்கள்