ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 7, 2023 வெள்ளிக்கிழமை

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 7, 2023 வெள்ளிக்கிழமை

அஸ்வினி: உற்சாகமாய், மிகுந்த உத்வேகத்துடன் வேலை பார்ப்பீர்கள்.

பரணி: அலைச்சல்களைச் சந்தித்த பின்பே காரியம் நடக்கும

கார்த்திகை: பொருளாதாரச் சிக்கல் தீரும் அளவுக்கு வருமானம் இருக்கும்.

ரோகிணி: அமைதியான வழியில் காரியம் சாதிக்கப் பழகுங்கள்.

மிருகசீரிடம்: வருமானத்தை பெருக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

திருவாதிரை: கூட வேலை செய்பவர்கள் உங்களைப் பற்றி குறை சொல்வார்கள்.

புனர்பூசம்: வாய்தாவால் தள்ளிப் போன வழக்குகள் சாதகமாக முடியும்.

பூசம்: பிள்ளைகளின் கல்வி வசதிக்காக இடமாற்றம் செய்வீர்கள்

ஆயில்யம்: தேவையற்ற பிரயாணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.

மகம்: அரசு வேலையில் அபாரமான சாதனை செய்வீர்கள்.

பூரம்: வீட்டில் சுப காரியங்களுக்காக அதிகப் பணம் செலவு செய்வீர்கள்.

உத்திரம்: புதிய தொழிலுக்காக நீங்கள் போட்ட திட்டம் வெற்றி பெறும்.

அஸ்தம்: இன்சூரன்ஸ் தொழிலில் எதிர்பார்த்த பாலிசி கிடைக்காது.

சித்திரை: கணவன் மனைவிக்கிடையே இருந்த சிக்கல் தீரும்.

சுவாதி: புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து நல்ல லாபம் அடைவீர்கள்.

விசாகம்: கவர்ச்சியில் மயங்கி கால் போன போக்கில் நடக்காதீர்கள்.

அனுஷம்: நீங்கள் கேட்ட இடத்தில் மறுப்பு இல்லாமல் பணம் கிடைக்கும்.

கேட்டை: தாய்வழிச் சகோதரர்களால் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும்.

மூலம்: அலுவலகத்தில் வேலைத்திறன் அதிகரிக்கும்.

பூராடம்: எந்தக் காரியத்தையும் முன்யோசனையுடன் செய்ய வேண்டும்.

உத்திராடம்: பிள்ளைகள் கல்வியில் தெளிவான சிந்தனை பெறுவார்கள்.

திருவோணம்: உங்களைப் பற்றிய விஷயங்களைப் பரிமாற வேண்டாம்.

அவிட்டம்: பங்குப் பரிவர்த்தனை உங்களுக்கு ஏற்றத்தைத் தரும்.

சதயம்: ஜாமீன் கையெழுத்துப் போடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.

பூரட்டாதி: வியாபாரத்தில் கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

உத்திரட்டாதி: வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துவீர்கள்.

ரேவதி: வாக்குறுதிகளைக் கொடுத்து கெட்ட பெயர் எடுக்காதீர்கள்.