சிவப்பு கற்றாளை மருத்துவ மகிமை - Tamil Health Tips

சிவப்பு கற்றாளை மருத்துவ மகிமை - Tamil Health Tips

சிவப்பு கற்றாளை மருத்துவ மகிமை - Tamil Health Tips
Red aloe vera medicinal benefits in tamil

நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்து தன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது, அந்த வகையில் கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை. இயற்கையாக வளரும் கற்றாழையில் அதிகப்படியான மருத்துவக் குணங்கள் உள்ளன. கற்றாழை என்பது பச்சை நிறத்தில் மட்டுமல்ல சிவப்பு நிறத்திலும் இருக்கிறது.

இது ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட தாவரம் ஆகும். இதன் அறிவியல் பெயர் அலோ கேமரோனி ஹெம்செல் (aloe cameroni hemsl). ஆலோ கேமரோனி என்பது மலாவி ஜிம்பாப்வே ஆகியவற்றிற்குள்ளான அலோ மரபணுவின் ஒரு வகை ஆகும்.

இது xanthorrhoeaceae குடும்பத்தைச் சேர்ந்தது.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய் கற்றாழை, கருங்கற்றாழை, சிவப்புக் கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. சோற்றுக் கற்றாழை பொதுவாக கிராமப்புறங்களில் வளரும் ஒரு வகை கற்றாழை.

ஆனால் சிவப்புக் கற்றாழை மலைப் பகுதியில் மட்டும் வளரக் கூடிய அரிய வகை கற்றாழை ஆகும். சிவப்புக் கற்றாழை மிக அரிதான ஒன்று. அதிகப்படியான செம்மண் எங்கே இருக்கிறதோ அங்கே தான் இந்தக் கற்றாழை வளரும். இந்தச் சிவப்புக் கற்றாழை விதையாகவோ அல்லது நாற்றாகவோ பயிரிடலாம்.

இது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும்.

சிவப்புக் கற்றாழையின் மடல்கள் பசுமை கலந்த செம்மை நிறத்தில் சுமார் பதினெட்டு அங்குலம் நீளத்தில் நல்ல சதைபற்றோடு இருக்கும். மடல்களில் மிகச் சிறிய வெள்ளைப் புள்ளிகள் தென்படும். ஓரங்களில் சிவப்பு நிற முட்கள் இருக்கும். கத்தியால் வெட்டினாலோ அல்லது ஒடித்தாலோ அதன் சதைப்பகுதி இரத்தம் போல் சிவந்து அதிலிருந்து அசல் இரத்தம் போன்ற திரவம் வடியும். அதன் சதைப்பகுதி சாதாரண கற்றாழை சோற்றைப் போல் கசப்பாக இருக்காது. நாற்றம் இல்லாமல் வெள்ளரிக்காய் போல இருக்கும்.

பொதுவாக சித்தர்கள் செங்கற்றாழையை செங்குமரி எனக் கூறுவர். செங்கற்றாழையில் இருந்து சித்தர்கள் காயகற்பம் தயாரித்தனர்.

சிவப்பு கற்றாழையின் பயன்கள்

இது உடலினை என்றும் இளமையாக வைப்பதற்கும், குழந்தையின்மையை போக்குவதற்கும் வழி வகுக்கிறது. எல்லா வகையான கற்றாழையிலும் உடலிற்குத் தேவையான வைட்டமின் சத்துக்கள் ஏராளமாக உண்டு. இது உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி உடலின் செல்களை உயிர்ப்புடன் காக்கிறது. இது நமக்கு புத்துயிரையும் அளிக்கிறது. கற்றாழையானது மருந்துப் பொருட்களாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. நீடித்த மலச்சிக்கலை போக்கவும், வாய்வுத் தொல்லையை நீக்கவும், வயிற்றின் சூட்டைத் தடுக்கவும், தீராத வயிற்றுப் புண்ணை நீக்கவும் பயன்படுகிறது.

சித்த மருத்துவம் சொல்லும் நன்மைகள்

சிவப்புக் கற்றாழையை மேலே உள்ள தோலைச் சீவி நீக்கி விட்டு அதன் சதைப்பகுதியை மட்டும் எடுத்து ஏழு முறை தண்ணீரில் அலசி விட்டு எடுத்து திரிகடுக தூளில் பிரட்டி மென்று உண்டு வரவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையாகக் காலை ஒரு முறையும் மாலை ஒரு முறையும் 48 நாள் உண்டு வந்தால் தீராத நோய் தீரும். அது மட்டுமல்லாமல் உடலில் கஸ்தூரி வாசனை வீசும், உடலில் வியர்வை வெளியேறாது, தலைமுடி கருக்கும், பார்வைத் திறன் அதிகரிக்கும், குழந்தையின்மை சரியாகும், நரை மாறும், மனம் விழிப்பு நிலையில் இருக்கும்.

ஒரு துண்டில் உள்ள சதை பற்றை உண்டால் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் இதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். கற்றாழை நம் வாழ்க்கையின் ஆற்றலை பெருக்குகிறது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கற்றாழை வழங்குகிறது.