20-03-2023 | தினசரி இராசிபலன் | திங்கள்கிழமை - பங்குனி (March) | Inraiya Rasipalan

இராசிபலன்களை விரிவாகக் காண காணொளியைப் பார்க்கவும்...
மேஷ ராசி
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்
ரிஷப ராசி
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்
மிதுன ராசி
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது
கடக ராசி
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்
சிம்ம ராசி
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்
கன்னி ராசி
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு
துலா ராசி
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது
விருச்சிக ராசி
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்
தனுசு ராசி
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்
மகர ராசி
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்
கும்பராசி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்
மீன ராசி
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்