தினசரி இராசிபலன் 05-03-2023 - பங்குனி (March) - ஞாயிற்றுக்கிழமை

தினசரி இராசிபலன் 05-03-2023 - பங்குனி (March)  - ஞாயிற்றுக்கிழமை
daily rasi palan


மேஷராசி அன்பர்களே,
இன்றைய நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சக பணியாளர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன் மனைவி உறவுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை வீண் செலவுகள் அதிகமாக இருக்கும்.

நட்சத்திர பலன்கள்:
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபராசி அன்பர்களே,
 
 ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க மிகவும் சிறந்த நாள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அர்ப்பணிப்புடன் பணி செய்து வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் ஒற்றுமை காணப்படும். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணம் வரவு அதிகமாக இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

மிதுனராசி அன்பர்களே,
 மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். கணவன் மனைவி உறவுக்குள் கலகலப்பாக பழக வேண்டும். இதனால் ஆரோக்கியமான உறவு பராமரிக்கப்பட்டு நல்லுறவு மேம்படும். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக இருக்கும்.

நட்சத்திர பலன்கள்:
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடகராசி அன்பர்களே, 
 கடகம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணி தொடர்பாக பயணங்கள் காணப்படும். கணவன் மனைவி உறவுக்குள் சில விரும்பத்தகாத தருணங்களை சந்திக்க நேரும். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை செலவுகள் நிறைந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.

நட்சத்திர பலன்கள்:
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மராசி அன்பர்களே,  
 இன்றைய நாள் உங்களுக்கு காணப்படும் காணப்படும் சிறிய பிரச்சனைகளை கையாள கடின முயற்சி தேவை. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சிகள் காணப்படாது. கணவன் மனைவி உறவுக்குள் சில மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் இன்று உங்கள் நிதிநிலை நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகளை இன்றைய நாள் எடுக்க வேண்டாம்.

நட்சத்திர பலன்கள்:-
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்அலைச்சல் காரணமாக உடல்அசதி உண்டாகும்.

கன்னிராசி அன்பர்களே,  
: இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு அனைத்து விதத்திலும் முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இன்று நாள் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் நேர்மையான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பண வரவு காணப்படும்.

நட்சத்திர பலன்கள்:
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

துலாராசி அன்பர்களே, 

 துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் செயல்களை சிறந்த முறையில் ஆற்றுவதற்கு உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் நேர்மையாக நடந்துகொள்வீர்கள். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

நட்சத்திர பலன்கள்:
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

விருச்சிகராசி அன்பர்களே, 
 நீங்கள் செய்த தவறுகளை இன்றைய நாள் திருத்திக்கொள்ள வேண்டும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிகளை பொறுமையுடனும் உறுதியுடனும் செய்வீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் சகஜமாக இருப்பது மிகவும் சிறந்தது. மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக இருக்கும்.

நட்சத்திர பலன்கள்:-
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசுராசி அன்பர்களே, 
 தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாள் வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அமைதியாக இறைவழிபாட்டில் ஈடுபட்டு உங்கள் பணிகளை ஆற்றுங்கள். கணவன் மனைவி உறவுக்குள் நட்பாக அணுகி கலகலப்பாக பழகுங்கள். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை அஜாக்கிரதை காரணமாக பணத்தை இழக்க நேரலாம்.

நட்சத்திர பலன்கள்:-
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் இழுபறியாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.

மகரராசி அன்பர்களே,
 இன்றைய நாள் உங்கள் முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்க கூடும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் பணிக்கு நல்ல வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்கும் மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை வளர்ச்சிகரமாக இருக்கும்.

நட்சத்திர பலன்கள்:-
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கும்பராசி அன்பர்களே,
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிகள் விருப்பமானதாக இருக்கும். என்றாலும் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். கணவன் மனைவி உறவுக்குள் நல்லிணக்கம் காணப்படும். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

நட்சத்திர பலன்கள்:
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மீனராசி அன்பர்களே,  

 இன்றைய நாள் கடினமான பணிகளையும் எளிதாக செய்வீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணியில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பண வரவும் செலவும் காணப்படுகின்றது.

நட்சத்திர பலன்கள்:
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.