ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 8, 2023 சனிக்கிழமை

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 8, 2023 சனிக்கிழமை

அஸ்வினி: ரகசிய நடவடிக்கை எதிலும் தயவுசெய்து ஈடுபடாதீர்கள்

பரணி: கட்டிடம் கட்டுவதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் .

கார்த்திகை: மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரோகிணி: திட்டமிட்டு செயல்களில் தாமதம் உண்டாகும்.

மிருகசீரிடம்: இன்று எடுக்கும் தீவிர முயற்சி எதிர்காலத்தில் பலனளிக்கும்.

திருவாதிரை: மனம் நிறைவு பெறும் வகையில் பணம் வரவு அதிகரிக்கும்.

புனர்பூசம்: உடல்நிலையில் அலட்சியம் காட்டாமல் உரிய சிகிச்சை எடுங்கள்.

பூசம்: ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து வேலை வாங்குவீர்கள்.

ஆயில்யம்: கடின வேலைகளை முடித்து அலுவலகத்தில் பெருமிதம் அடைவீர்கள்.

மகம்: ஆன்மீக பெரியவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெறுவீர்கள்.

பூரம்: பிள்ளைகள் திருமணத்திற்கான பொருட்களை வாங்குவீர்கள்.

உத்திரம்: சிறு தடைகளைத் தாண்டி தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

அஸ்தம்: வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எங்கு வீடு வாங்குவார்கள் .

சித்திரை: வேறு வீட்டிற்கு மாறும் முயற்சியில் தாமதம் உண்டாகும்.

சுவாதி: அக்கறையுடன் வியாபாரம் செய்து நல்ல ஆதாயம் பார்ப்பீர்கள்.

விசாகம்: அலுவலக வேலைகளில் தைரியமாக செயல்படுவீர்கள்.

அனுஷம்: பொறுமையாக இருந்து திறமையாக பணி முடிப்பீர்கள்.

கேட்டை: வாய்ப்புகளை பயன்படுத்தி வசதிகளை பெருக்குவீர்கள்.

மூலம்: எதிர்பார்த்த சிங்கப்பூர் வேலை விசா உங்களுக்கு கிடைக்கும்.

பூராடம்: மனதுக்கு பிடித்த அவர்களுக்கு நன்மை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

உத்திராடம்: அலுவலகத்தில் யாரையும் அவசரப்பட்டு பேசி விடாதீர்கள்.

திருவோணம்: பணியாளர்கள் நன்கு உழைத்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.

அவிட்டம்: புதிய திட்டங்களுக்கான சிறிய நிதி உதவி உங்களுக்கு கிடைக்கும்.

சதயம்: உயரதிகாரிகளின் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பூரட்டாதி: தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நல்லது.

உத்திரட்டாதி: வெளிநாட்டில் வசிக்கும் ரத்த உறவுகளால் பயனில்லை.

ரேவதி: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொந்தங்களை சேர்ப்பீர்கள்.